செய்திகள்
பிசிசிஐ

இந்தியாவில் பிங்க் பால் கிரிக்கெட் விளையாட உள்ளது இங்கிலாந்து: பி.சி.சி.ஐ.

Published On 2020-10-18 14:00 GMT   |   Update On 2020-10-18 14:00 GMT
அடுத்த வருடம் தொடக்கத்தில் இந்தியா வர இருக்கும் இங்கிலாந்து டெஸ்ட் அணி ஒரு பகல்-இரவு ஆட்டத்தில் விளையாடும் எனத் தெரிகிறது.
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் பி.சி.சி.ஐ உறுப்பினர்கள் வெர்ச்சுவல் மீட்டிங்கில் நடத்திய கலந்தாய்வு கூட்டத்தில் இந்தியாவின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம், இங்கிலாந்தின் இந்திய சுற்றுப்பயணம் மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் நடத்துவது குறித்து ஆலோசித்தனர்.

தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் போலவே இந்தியாவில் மூன்று முதல் நான்கு மைதானங்களில் பயோ-செக்யூரிட்டி முறையில் இங்கிலாந்து - இந்தியா தொடரை நடத்த முடிவு செய்துள்ளதாகவும், அதில் அகமதாபாத் அல்லது கொல்கத்தாவில் பிங்க் பால் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியை நடத்த உள்ளதாகவும் கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த தொடர் இந்தியாவின் ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்திற்கு பிறகு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதில் பல்வேறு நடைமுறை சிக்கல் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் ஆஸ்திரேலியாவுக்கு செல்ல உள்ள இந்திய வீரர்கள் தனிமைப்படுத்தும் நாட்களை குறைக்குமாறு ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டிடம் கோரிக்கை வைத்துள்ளோம். ஏனென்றால் ஆஸ்திரேலிய தொடரில் விளையாட உள்ள வீரர்களில் பெரும்பாலானவர்கள் ஐபிஎல் தொடரின் பயோ செக்யூரில் உள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News