செய்திகள்
ஜோகோவிச்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் - அரைஇறுதியில் ஜோகோவிச்

Published On 2020-10-08 07:36 GMT   |   Update On 2020-10-08 07:36 GMT
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் நாளை நடக்கவுள்ள அரையிறுதி ஆட்டத்தில் ஜோகோவிச்- சிட்சி பாஸ் மோதுகின்றனர்.

பாரீஸ்:

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த கால் இறுதி ஆட்டம் ஒன்றில் உலகின் முதல் நிலை வீரரான ஜோகோவிச் (செர்பியா) 17-வது வரிசையில் உள்ள பேப்லோ கரன்னோ பஸ்டா (ஸ்பெயின்) மோதினார்கள்.

இதில் ஜோகோவிச் 4-6, 6-2, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று 10-வது முறையாக அரை இறுதிக்கு தகுதி பெற்றார். இந்த வெற்றியை பெற அவருக்கு 3 மணி 10 நிமிட நேரம் தேவைப்பட்டது.

2016-ம் ஆண்டு சாம்பியனான ஜோகோவிச் அரை இறுதியில் கிரீஸ் நாட்டைச் சேர்ந்த ஸ்டெபானோஸ் சிட்சிபாஸை சந்திக்கிறார்.

5-ம் நிலை வீரரான அவர் கால் இறுதியில் 7-5, 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் ஆண்ட்ரூ ருப்லேவை (ரஷியா) தோற்கடித்தார். சிட்சிபாஸ் முதல்முறையாக பிரெஞ்சு ஓபன் அரையிறுதிக்கு முன்னேறி இருக்கிறார்.

நாளை நடைபெறும் அரையிறுதி ஆட்டங்களில் ஜோகோவிச்-சிட்சி பாஸ், நடால் -டியாகோ ஸ்வார்ட்ஸ் மேன் மோதுகிறார்கள்.

பெண்கள் பிரிவு அரை இறுதி ஆட்டங்கள் இன்று நடக்கிறது. இதில் போடோரோஸ்கா (அர் ஜென்டினா)-இகா (போலந்து), சோபியா கெனின் (அமெரிக்கா)- கிவிடோவா (செக் குடியரசு) மோதுகிறார்கள்.

Tags:    

Similar News