செய்திகள்
எம்எஸ் டோனி

சிறப்பான பந்து வீச்சு: மோசமான பேட்டிங் - தோல்வி குறித்து டோனி விளக்கம்

Published On 2020-10-08 04:28 GMT   |   Update On 2020-10-08 04:28 GMT
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் 10 ரன்களில் தோல்வியடைந்தது குறித்து சென்னை அணியின் கேப்டன் டோனி விளக்கம் அளித்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட்டின் 21-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. 

முதலில் களம் இறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவரில் 167 ரன்கள் எடுத்தது. 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 10 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியடைந்தது. 

தோல்வி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம் எஸ் டோனி கூறியதாவது:-

எங்களது பந்து வீச்சு சிறப்பாக இருந்தது ஆனால் பேட்டிங் மோசமாக இருந்தது. குறிப்பாக கடைசி நேரத்தில் 1 ரன்கள் மற்றும் பவுண்டரி எடுக்காதது தோல்விக்கு முக்கிய காரணம். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்து வீச்சாளர்கள் மிடில் ஓவரில் சிறப்பாக பந்து வீசி விக்கெட்டுகளை வீழ்த்தியது எங்களுக்கு நெருக்கடியாக இருந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

போட்டியின் இறுதி கட்டத்தில் அதிரடியாக ஆடவேண்டிய நிலையில் 12 பந்தை சந்தித்து 7 ரன்னை மட்டுமே எடுத்த ஜாதவை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் வறுத்தெடுக்கின்றனர்.
Tags:    

Similar News