செய்திகள்
நஜீப் தரகாய்

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் விபத்தில் உயிரிழப்பு

Published On 2020-10-06 11:47 IST   |   Update On 2020-10-06 11:47:00 IST
ஆப்கானிஸ்தானின் பிரபல கிரிக்கெட் வீரர் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
காபுல்:

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் நஜீப் தரகாய். ஆப்கானிஸ்தான் அணிக்காக 12 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், கடந்த வெள்ளிக்கிழமை ஜலதாபாத் நகரில் உள்ள   கடையில் பொருட்கள் வாங்க  சாலையைக்  கடந்த போது கார் விபத்தில் சிக்கினார்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த அவர் உயிருக்கு ஆபத்தான நிலைமையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை  பெற்று வந்தார்.

இந்நிலையில், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி நஜீப் தரகாய் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்த தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதிரடியாக ஆடக்கூடிய நஜீப் தரகாய் உயிரிழப்பு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு மிகப்பெரும் இழப்பு எனவும் இரங்கல் செய்தியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. 

Similar News