செய்திகள்
ஆர்சிபி-க்கு 197 ரன்கள் வெற்றி இலக்கு: ஸ்டாய்னிஸ் அதிரடி அரைசதம்
மார்கஸ் ஸ்டாய்னிஸின் அதிரடி ஆட்டத்தால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு 197 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது டெல்லி கேப்பிட்டல்ஸ்.
ஐபிஎல் தொடரின் 19-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. ஆர்.சி.பி. அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செயதது.
அதன்படி டெல்லி அணியின் பிரித்வி ஷா, ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர். முதல் ஓவரில் பிரித்வி ஷா மூன்று பவுண்டரிகள் விளாசினார்.
உடனடியாக விராட் கோலி சுழற்பந்தை கொண்டு வந்தார். வாஷிங்டன் சுந்தர் அபாரமாக பந்து வீசானர். ஆனால் நவ்தீப் சைனி வீசிய 3-வது ஓவரில் டெல்லி 14 ரன்கள் அடித்தது. அடுத்த ஓவரில் வாஷிங்டன் சுந்தர் 4 ரன்கள் மட்டுமே வி்ட்டுக்கொடுத்தார்.
வாஷிங்டன் சுந்தர் பந்து எடுபட்டதால் 5-வது ஓவரை சாஹல் வீசினார். இந்த ஓவரில் 18 ரன்கள் அடித்தது டெல்லி. 6 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் அடித்தது.
7-வது ஓவரை சிராஜ் முகமது வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தில் பிரித்வி ஷா ஆட்டமிழந்தார். அவர் 23 பந்தில் 42 ரன்கள் அடித்தார். அதன்பின் டெல்லி அணியின் ஸ்கோர் உயர்வில் தொய்வு ஏற்பட்டது. அடுத்து ஷ்ரோயஸ் அய்யர் களம் இறங்கினார்.
10-வது ஓவரின் 4-வது பந்தில் தவான் 32 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 12-வது ஓவரில் ஷ்ரேயாஸ் அய்யர் 11 ரனகள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அப்போது டெல்லி 11.3 ஓவரில் 90 ரன்கள் எடுத்திருந்தது. 4-வது விக்கெட்டுக்கு ரிஷப் பண்ட் உடன் மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஜோடி சேர்ந்தார். ஸ்டாய்னிஸ் தொடக்கத்தில் இருந்து அதிரடி காட்டினார். 14-வது ஓவரில் 15 ரன்களும், 15-வது ஓவரில் 17 ரன்களும் அடித்தது டெல்லி. இந்த ஓவரின் கடைசி பந்தில் 30 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டாய்னிஸ் கொடுத்த கேட்ச்-ஐ ஆர்சிபி வீரர்கள் பிடிக்கத் தவறினர்.
நவ்தீப் சைனி வீசிய 17-வது ஓவரில் 18 ரன்கள் அடித்தது. 19-வது ஓவரை சிராஜ் வீசினார். இந்த ஓவரில் ரிஷப் பண்ட் 25 பந்தில் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
கடைசி பந்தை பவுண்டரிக்கு விரட்டி ஸ்டாய்னிஸ் 24 பந்தில் அரைசதம் அடித்தார். உடனான வீசிய கடைசி ஓவரில் ஒரு சிக்ஸ் உடன் 12 ரன்கள் அடிக்க டெல்லி கேப்பிட்டல்ஸ் 20 ஓவரில் 196 ரன்கள் குவித்தது.