செய்திகள்
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வீரர்கள்

முதல் கோணல் முற்றிலும் கோணல்: அதிக விக்கெட், அதிக ரன் ஏதும் பலன் அளிக்காமல் ஏமாற்றம் அடைந்த பஞ்சாப்

Published On 2020-10-05 10:43 GMT   |   Update On 2020-10-05 10:43 GMT
டெல்லி அணிக்கெதிராக ஜெயிக்க வேண்டிய போட்டியை கோட்டைவிட்ட பஞ்சாப் அணிக்கு, இந்தத் தொடரில் இதுவரை ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது.
அனில் கும்ப்னே, கேஎல் ராகுல் காம்பினேசனில் பஞ்சாப் அணி புது எழுச்சியுடன் விளையாடும் என ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பு கணிக்கப்பட்டது. முதல் போட்டியில டெல்லியை எதிர்கொண்டது. 158 ரன் இலக்கை தொடக்கதத்தில் எட்ட திணறியது. மயங்க் அகர்வால் அதிரடி காட்ட கடைசி மூன்று பந்தில் ஒரு ரன் மட்டுமே தேவைப்பட்டது. 4-வது பந்தில் ரன் எடுக்காத மயங்க் அகர்வால், 5-வது பந்தை தேவையில்லாமல் தூக்கி அடித்து ஆட்டமிழந்தார். கடைசி பந்தில் ஜோர்டான் ஆட்டமிழக்க சூப்பர் ஓவரானது. இதில் தோல்வியடைந்தது.

அடுத்த போட்டியில் கேஎல் ராகுல் அதிரடி சதத்தால் ஆர்சிபியை 97 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. என்றாலும் அடுத்தடுத்து மூன்று போட்களை ராஜஸ்தானுக்கு எதிராக, மும்பைக்கு எதிராக. சென்னைக்கு எதிராக எந்தவித போராட்டமின்றி தோல்வியை சந்தித்தது.

ஐபிஎல் ரன் குவிப்பில் கேஎல் ராகுல் 302 ரன்களுடன் முதல் இடத்தையும், மயங்க் அகர்வால் 272 ரன்களுடனும் 2-வது இடத்தையும் பிடித்துள்ளனர். பந்து வீச்சில் முகமது ஷமி 8 விக்கெட்டும் (அதிக ரன் கொடுத்ததால் 4-வது இடம்), காட்ரெல் 6 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.

என்றாலும் அணிகளின் புள்ளிகள் பட்டியலில் ஐந்து போட்டிகளில் நான்கில் தோல்வியடைந்து கடைசி இடத்தை பிடித்துள்ளது. பஞ்சாப் அணிக்கு இன்னும் 9 போட்டிகள் உள்ளது. இதில் 7 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளேஆஃப் சுற்றை எதிர்பார்க்க முடியும்.

டெல்லியிடம் வெற்றி பெற வேண்டிய முதல் போட்டியை இழந்தது, அந்த அணிக்கு முதல் கோணல் முற்றிலும் கோணல் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.
Tags:    

Similar News