செய்திகள்
ஐபிஎல் பிளே-ஆஃப்ஸ் சுற்றுக்கு இந்த அணி கட்டாயம் தகுதி பெறும் என்கிறார் பிரெட் லீ
ஐபிஎல் 13-வது சீசனில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணி, பிளே-ஆஃப்ஸ் சுற்றுக்கு இந்த அணி கட்டாயம் தகுதி பெறும் என்பதை பிரெட் லீ கணித்துள்ளார்.
ஐபிஎல் 13-வது சீசன் வருகிற 19-ந்தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி கேப்பிட்டல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் விளையாடுகின்றன.
8 அணிகளில் பிளே-ஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறும் அணிகள், சாம்பியன் பட்டம் வெல்லும் அணிகள் எவை என்பது குறித்து பிரெட் லீ கூறுகையில் ‘‘எந்த அணி சாம்பியன் பட்டம் வெல்லும் என்பதை கூறுவது கடினம்தான். ஆனால், சிஎஸ்கே சாம்பியன் பட்டம் வெல்ல வாய்ப்புள்ளது. கேகேஆர் அணி உறுதியாக பிளே-ஆஃப்ஸ் சுற்றுக்கு தகுதி பெறும்’’ என்றார்.
போட்டியை ஒளிபரப்பு செய்யும் ஸ்டார் நிறுவனம் பிரெட் லீயை வர்ணனையாளராக பணி அமர்த்தியுள்ளது. இதற்காக பிரெட் லீ மும்பை வந்துள்ளார். தற்போது 14 நாட்கள் தனிமையில் உள்ளார்.