செய்திகள்
ஷஷாங்க் மனோகர், எஹ்சான் மானி

‘பிக் த்ரீ’அணிகளின் வருவாய்க்கு வேட்டு வைத்ததால் ஷஷாங்க் மனோகரை புகழ்ந்த பாக். ஐசிசி முன்னாள் தலைவர்

Published On 2020-09-10 13:08 GMT   |   Update On 2020-09-10 13:08 GMT
இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளின் வருமானத்தை குறைத்ததற்காக ஷஷாங்க் மனோகரை பாகிஸ்தானைச் சேர்ந்து முன்னாள் ஐசிசி தலைவர் புகழ்ந்துள்ளார்.
கிரிக்கெட்டில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. ஐசிசி போட்டிகள் மூலம் வரும் வருமானத்தில் மிகப்பெரிய பகுதி இந்த மூன்று அணிகளுக்கும் பிரித்து வழங்கப்படும். இதனால் இந்த மூன்று அணிகளையும் ‘பிக் த்ரீ’என்று அழைக்கப்பட்டது.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்த ஷஷாங்க் மனோகர் ஐசிசி தலைவராக பொறுப்பேற்றார். அப்போது பிக் த்ரீ அணிகளுக்கு வழங்கப்படும் வருவாய் பகிர்வை மற்ற அணிகளுக்கும் வழங்கும் வகையில் ‘பிக் த்ரீ’ நடைமுறையை நீக்கினார்.

இதனால் இந்தியாவுக்கு கிடைக்கும் வருமானம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. இந்த செயலுக்காக முன்னாள் ஐசிசி தலைவராக இருந்து பாகிஸ்தானின் எஹ்சான் மானி ஷஷாங்க் மனோகரை புகழ்ந்துள்ளார்.

இதுகுறித்து எஹ்சான் மானி கூறுகையில் ‘‘உலக கிரிக்கெட்டை மிகவும் பாதித்த ‘பிக் த்ரீ’ பார்முலா நீக்கப்பட்டது. பிசிசிஐ-யின் தலைவராக இருந்த ஸ்ரீனிவாசன், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா கிரிக்கெட் உடன் இணைந்து வடிவமைக்கப்பட்டது.

ஐசிசி-யில் நான் பதவி வகித்த நேரத்தில், நான் மிகவும் அதிர்ஷ்டம் பெற்றவன், ஏனென்றால், அனைவரும் ஒன்றாக இணைந்து ஐசிசி வடிவமைக்கப்பட்டது. ‘பிக் த்ரீ’ பகிர்ந்துஅளிப்பு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. மூன்று நாடுகளும் ஒப்பந்தத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என்றால், உங்களுடன் விளையாட மாட்டோம் என மிரட்டினார்கள். எல்லோரும் இப்போது ஆரோக்கியமற்ற சூழலில் தங்கள் சொந்த நலன்களைக் கவனிக்க துடிக்கிறார்கள்.

‘பிக் த்ரீ’ எந்த வடிவிலான கிரிக்கெட்டிற்கும் ஆதாயத்தை கொடுக்கவில்லை. உலக கிரிக்கெட்டை மிகப்பெரிய அளவில் பாதித்தது. உலகளாவிய முன்னேற்றம், ஐசிசி-யின் துணை உறுப்பினர் நாடுகளின் நிதியை எடுத்துக் கொண்டார்கள். முழு விஷயம் மிகவும் விரும்பத்தகாததாக இருந்தது. ஐசிசி-யின் பெரும்பாலான போட்டியில் இந்த மூன்று நாடுகளால் பிரிக்கப்பட்டன.

ஷஷாங்க் மனோகர் அதிக முயற்சி எடுத்து ஏராளமான சேதங்களை தவிர்க்க வேண்டியிருந்தது. ஆனால் இன்னும் நிறைய செய்ய வேண்டும், அது ஐ.சி.சி-யின் சரியான நிர்வாக மறுஆய்வு மூலம் மட்டுமே செய்ய முடியும், இது நடக்கும். இல்லையெனில் திவாலாகும் நாடுகள் நம்மிடம் இருக்கும்’’ என்றார்.
Tags:    

Similar News