செய்திகள்
சர்பராஸ் அகமது, மிஸ்பா உல் ஹக்

கடைசி போட்டியில் விளையாட சர்பராஸ் அகமது விரும்பவில்லை: மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார்

Published On 2020-09-10 17:54 IST   |   Update On 2020-09-10 17:54:00 IST
இங்கிலாந்து தொடரின்போது கடைசி போட்டியில் விளையாட சர்பராஸ் அகமது மறுக்கவில்லை என்று மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து மூன்று டெஸ்ட் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடியது. டெஸ்ட் மற்றும் டி20 போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் முன்னாள் கேப்டன் சர்பராஸ் அகமது இடம்பிடித்திருந்தார்.

ஆனால் மூன்று டெஸ்ட் மற்றும் முதல் இரண்டு டி20 போட்டிகளில் அவர் சேர்க்கப்படவில்லை. 3-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் விளையாட வாய்ப்பு தருவதாக அணி நிர்வாகம் தெரிவித்திருந்தது. அப்போது அவர் விளையாட மறுப்பு தெரிவித்ததாக கூறப்பட்டது.

ஆனால், சர்பராஸ் அகமது கடைசி போட்டியில் விளையாட விரும்பவில்லை என்று தலைமை பயிற்சியாளர் மிஸ்பா-உல்-ஹக் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மிஸ்பா உல் ஹக் கூறுகையில் ‘‘சர்பராஸ் அகமது விளையாட மறுப்பு தெரிவிக்கவில்லை. ஆனால், அவரது ஒதுக்கீடு மற்றும் தொடரின் கடைசி போட்டியில் விளையாட அழைத்ததால் தயக்கம் காட்டினார்.

நான் அந்த நிலையில் இருந்திருந்தாலும் அதே மாதிரிதான் செய்திருப்பேன். ஒரு தொடரில் முன்னதாக அனைத்து போட்டிகளிலும் சேர்க்கப்படாமல், கடைசி போட்டியில் மட்டும் சேர்க்கப்பட்டால் வீரர்கள் தயக்கம் மற்றும் உறுதியற்ற நிலையை உணர்வார்கள்.

அவருடன் நாங்கள் ஆலோசனை நடத்திய பிறகு, எதிர்கால திட்டத்தில் உள்ளீர்கள். அதனால் தயக்கமின்றி விளையாடலாம் எனக் கூறினோம்’’ என்றார்.

Similar News