செய்திகள்
எம்எஸ் டோனி, அனில் கும்ப்ளே

எம்எஸ் டோனி 100 சதவீதம் பங்களிப்பை கொடுப்பார்: அனில் கும்ப்ளே

Published On 2020-09-09 10:06 GMT   |   Update On 2020-09-09 10:06 GMT
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ் டோனி, அவரது 100 சதவீதம் பங்களிப்பை கொடுப்பார் என்று அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன எம்.எஸ். டோனி கடந்த மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஏற்கனவே கடந்த ஒரு வருடமாக விளையாடாமல் இருக்கும் அவரால் ஐபிஎல் போட்டியில் 100 சதவீதம் பங்களிப்பை கொடுக்க இயலுமா? என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில் எம்எஸ் டோனி 100 சதவீதம் ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று இந்தியாவின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்த அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அனில் கும்ப்ளே கூறுகையில் ‘‘எம்.எஸ். டோனி பற்றி தெரியும், அவருடைய 100 சதவீதம் பங்களிப்பை கொடுப்பார். முதல் ஐபிஎல் தொடரில் விளையாடினாலும் கூட, நான் 2-வது சீசனில் விளையாடிய போது, சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றிருந்தேன்.

ஐபிஎல் அணியில் என்னைத் தவிர மற்ற ஏழு அணிகளிலும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள்தான் தலைமை பயிற்சியாளராக உள்ளனர். ஐபிஎல் போட்டியில் மேலும் இந்தியாவைச் சேர்ந்த நபர்கள் தலைமை பயிற்சியாளராக இருக்க வேண்டும் என்பதை நான் விரும்புகிறேன்.

இது இந்திய வளங்களின் உண்மையான பிரதிபலிப்பு இல்லை. ஐபிஎல் தலைமை பயிற்சியாளராக அதிக அளவில் இந்தியாவை சேர்ந்தவர்கள் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஒரேயொரு ஹெட் கோச் என்பது சற்று முரண்பாடாக உள்ளது. ஒரு குறிப்பிட்ட காலத்தில் அதிகப்படியான பயிற்சியாளர்கள் இருப்பார்கள் என நினைக்கிறேன்.’’ என்றார்.
Tags:    

Similar News