செய்திகள்
மிட்செல் மார்ஷ், ஆஷ்டோன் அகர்

ஆஸ்திரேலியா ஆறுதல் வெற்றி: கடைசி போட்டியில் இங்கிலாந்தை 5 விக்கெட்டில் வீழ்த்தியது

Published On 2020-09-09 09:46 GMT   |   Update On 2020-09-09 09:46 GMT
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் ஆஸ்திரேலியா ஐந்து விக்கெட் வித்தியாசத்ததில் வெற்றி பெற்று ஒயிட்வாஷை தடுத்தது.
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. முதல் இரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை 2-0 எனக் கைப்பற்றியிருந்தது.

இந்நிலையில் 3-வது மற்றும் கடைசி போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 6 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் மட்டுமே எடுத்தது.

தொடக்க வீரர் டாம் பாண்டன் 2 ரன்னில் வெளியேறினார். பேர்ஸ்டோவ் 44 பந்தில் 55 ரன்கள் எடுத்தார். ஜோ டென்லி 19 பந்தில் 29 ரன்களும், மொயீன் அலி 21 பந்தில் 23 ரன்களும் அடித்தனர்.

பின்னர் 146 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. ஆரோன் பிஞ்ச் 26 பந்தில் 39 ரன்களும், மார்கஸ் ஸ்டாய்னிஸ் 18 பந்தில் 26 ரன்களும் அடித்தனர். மிட்செல் மார்ஷ் ஆட்டமிழக்காமல் 36 பந்தில் 39 ரன்களும், ஆஷ்டோன் அகர் 13 பந்தில் 16 ரன்களும் அடிக்க ஆஸ்திரேலியா 19.3 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்து ஐந்து விக்கெட் வித்தியாசதத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா ஒயிட்வாஷ் ஆவதை தடுத்தது. மிட்செல் மார்ஷ் ஆட்ட நாயகன் விருதும், ஜோஸ் பட்லர் தொடர் நாயகன் விருதையும் பெற்றது.
Tags:    

Similar News