செய்திகள்
எம்எஸ் டோனி, மார்கஸ் ஸ்டாய்னிஸ்

டோனியை போன்று ஒரு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனை தேடும் ஆஸ்திரேலியா

Published On 2020-09-06 12:44 GMT   |   Update On 2020-09-06 12:44 GMT
எம்.எஸ். டோனியை போன்று சிறந்த பினிஷராக மார்கஸ் டாஸ்னிஸை உருவாக்க ஆஸ்திரேலியாக கிரிக்கெட் விரும்புகிறது.
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான முதல் டி20 போட்டி சவுத்தாம்ப்டனில் நடைபெற்றது. 163 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. டேவிட் வார்னர் 58 ரன்களும், பிஞ்ச் 46 ரன்கள் அடித்தாலும் ஆஸ்திரேலியா 2 ரன்னில் தோல்வியடைந்தது. மார்கஸ் ஸ்டாய்னிஸ் 18 பந்தில் 23 ரன்கள் அடித்தாலும் அணியை வெற்றி பெற வைக்க முடியவில்லை. 9 ரன்கள் எடுப்பதற்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்தது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

இந்நிலையில் எம்.எஸ். டோனியை போன்று மிடில் ஆர்டர் வரிசையில் ஒரு வீரரரை உருவாக்க விரும்புகிறோம். அது ஒரேநாள் இரவில் நடந்து விடாது என்று ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

அந்த அணி வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் மார்கஸ் ஸ்டாய்னிஸை பினிஷராக உருவாக்க விரும்புகிறது ஆஸ்திரேலியா. முதல் போட்டியில் அவர் அந்த பணியை சிறப்பாக செய்யாவிடிலும், அடுத்த இரண்டு வருடங்கள் அடுத்தடுத்து உலக கோப்பை தொடர் வர இருப்பதால் அவர் மீது நம்பிக்கை வைத்துள்ளது.

ஆஸ்திரேலிய அணியின் துணைக் கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறுகையில் ‘‘எந்தவொரு கிரிக்கெட் போட்டியிலும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் பணியை செய்வது மிகவும் கடினம் என சொல்லக்கூடும். அதற்கான வழியை கண்டுபிடித்து, அந்த நபருடன் நாங்கள் செல்ல வேண்டும்.

எம்.எஸ். டோனிய போன்ற ஒருவர் இருக்க வேண்டும். எம்.எஸ். டோனி உலகின் சிறந்த வீரர். ஏனென்றால், அவர் 300-க்கு மேலான ஒருநாள் போட்டியில் விளையாடியுள்ளார். எங்களுடைய வார பயிற்சி போட்டியை பார்த்தீர்கள் என்றால், நாங்கள் அதுபோன்ற ஏராளமான வீரர்களை பெற்றுள்ளோம்.

ஆனால் ஒரேநாள் இரவில் நடந்து விடாது என்பது எங்களுக்குத் தெரியும். தேர்வாளர்கள், ஆரோன் பிஞ்ச் இதுகுறித்து பேசவேண்டும். அவர்களின் பணியை கண்டுபிடித்து, அந்த இடத்தில் விளையாட அதிகமான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். நாங்கள் சரியான அணியை, சரியான வீரர்களை பெற்றுள்ளோம். இதன்மூலம் அவர்களுக்கு ஏராளமான போட்டிகள் கிடைக்கும்’’ என்றார்.

பிக் பாஷ் லீக்கில் அதிக ரன்கள் குவித்த ஸ்டாய்னிஸ் ஆரோன் பிஞ்ச், வார்னர், ஸ்டீவ் ஸ்மத், மேக்ஸ்வெல் ஆகியோருக்க பின்னர் விளையாட வேண்டியுள்ளது.

பந்தை பவராக அடிக்கும் திறமை பெற்ற ஸ்டாய்னிஸ், தொடக்கதில் இருந்தே அதிரடிய ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் சற்று திணறுகிறார். இது அவருக்கு சற்று பின்னடைவாக உள்ளது.
Tags:    

Similar News