செய்திகள்
விராட் கோலி, டி வில்லியர்ஸ்

விராட், டி வில்லியர்ஸ் ஆகியோரை மட்டுமே சார்ந்து ஆர்சிபி இல்லை: உமேஷ் யாதவ்

Published On 2020-09-03 10:59 GMT   |   Update On 2020-09-03 10:59 GMT
விராட் கோலி மற்றும் ஏபி டி வில்லியர்ஸ் ஆகியோரை மட்டுமே சார்ந்து ஆர்சிபி அணி இருக்கிறது என்பதை ஏற்க இயலாது என்று உமேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக திகழ்ந்து வருபவர் விராட் கோலி. அதுபோல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள ஏபி டி வில்லியர்சும் சிறந்த பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர். இருவரும் ஆர்சிபி அணிக்காக விளையாடி வருகிறார்கள்.

இருவரும் அந்த அணியின் பேட்டிங்கில் முதுகெலும்பாக உள்ளனர். இரண்டு பேரும் உடனடியாக ஆட்டம் இழந்தால், அந்த அணி திணறிவிடும். அதனால் இருவரையும் சார்ந்தே அணி இருக்கிறது எனச் சொல்லப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இருவரையும் சார்ந்துதான் ஆர்சிபி அணி உள்ளது என்று அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் கூறுகையில் ‘‘அவர்கள் எங்களுக்கு ஏராளமான ஆட்டங்களையும் வென்று கொடுத்துள்ளனர். நாங்கள் அவர்களை நம்பியிருப்பதாக மக்கள் கூறுவார்கள், ஆனால், கடந்த வருடம் நடைபெற்ற கடைசி போட்டியை பார்த்தால், குர்கீரத் மான், ஹெட்மையர் எங்களுக்கு போட்டியை வென்று கொடுத்தனர். ஆகவே, உண்மையிலேயே இரண்டு பேரை மட்டும் நாங்கள் சார்ந்திருக்கவில்லை.

எங்கள் அணியில் 11 வீரர்கள் உள்ளனர். அவர்கள் இரண்டு பேரையும் மட்டுமே நம்பியிருந்தால், அதன்பிறகு மற்றவர்கள் ஏன் விளையாட வேண்டும். ஒவ்வொரு நபரும் அணிக்கு தங்களது பங்களிப்பை அளித்து வருகின்றனர். மற்றவர்களை விட இரண்டு பேரும் சற்று அதிகமான பங்களிப்பை கொடுக்கின்றனர். அவர்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி கொண்டிருப்பது அணிக்கு சிறந்ததாக உள்ளது’’ என்றார்.
Tags:    

Similar News