செய்திகள்
ஐபிஎல் 2020: வார்ம்-அப் போட்டிகளை விரும்பும் அணிகள்- பிசிசிஐ வாய்ப்பு கொடுக்குமா?
பயிற்சிக்குப்பின் வார்ம்-அப் போட்டிகள் நடைபெற்றால் நன்றாக இருக்கும் என ஐபிஎல் போட்டியில் விளையாடும் பெரும்பாலான அணிகள் விரும்புகின்றன.
ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கிறது. இன்னும் 17 நாட்கள் மட்டுமே உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைத் தவிர மற்ற அணிகள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
மார்ச் மாதத்திற்குப்பிறகு கிரிக்கெட் வீரர்கள் எந்தவிதமாக போட்டி விளையாட்டில் விளையாடவில்லை. தற்போது பயிற்சி முடித்த கையுடன் நேரடியாக மிகப்பெரிய தொடரில் விளையாட இருக்கிறது.
இதனால் ஒன்றிரண்டு வார்ம்-அப் போட்டிகள் நடைபெற்றால் நன்றாக இருக்கும் என்று பெரும்பாலான அணிகள் விரும்புகின்றன.
முன்னணி அணியின் நிர்வாகி ஒருவர் ‘‘சில வார்ம்-அப் மேட்ச்கள் தொடருக்கு சிறந்ததாக இருக்கும்’’ என்றார்.
மற்றொரு அணியின் சிஇஓ ‘‘வார்ம்-அப் போட்டிகளுக்கு என்னுடைய 100 சதவீதம் ஆதரவு உண்டு’’என்றார்.
மேலும் இரண்டு அணிகள் ‘‘வார்ம்-அப் போட்டிகளால் மட்டுமே தொடரின் முதல்நாளில் இருந்தே வீரர்கள் சரியான வழியில் பழைய ஆட்டத்திற்கு திரும்ப முடியும்’’ என்றார்.
போட்டியை ஒளிபரப்பும் ஸ்டார் நிறுவனமும் வார்ம்-அப் போட்டியை விரும்புகிறது. வார்ம்-அப் போட்டிகள் மூலம் எதிர்ப்பார்ப்பை தூண்ட உதவியாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.