செய்திகள்
பும்ரா, வாசிம் அக்ரம்

பும்ரா கவுன்ட்டி கிரிக்கெட்டில் விளையாடக் கூடாது: வாசிம் அக்ரம்

Published On 2020-05-11 09:30 GMT   |   Update On 2020-05-11 09:30 GMT
இங்கிலாந்தில் நடைபெறும் கவுன்ட்டி கிரிக்கெட்டில் விளையாடும் எண்ணம் பும்ராவுக்கு வரக்கூடாது என்று வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அணியின் தலைசிறந்த பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் வாசிம் அக்ரம். இளமைக்காலத்தில் வாசிம் அக்ரம் இங்கிலாந்தின் லாங்காஷைர் கவுன்ட்டி அணிக்காக விளையாடியுள்ளார்.

தற்போது டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் அதிகரித்துவிட்டன. இந்தியாவின் நம்பர் ஒன் பந்து வீச்சாளரான பும்ரா மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடி வருகிறார். ஏற்கனவே அவருக்கு ஒர்க்லோடு அதிகமாக உள்ளது.

கவுன்ட்டி கிரிக்கெட், முதல்-தர போட்டிகளில் விளையாடினால்தான் பந்து வீச்சு குறித்து கற்றுக்கொள்ள முடியும். இருந்தாலும், இந்த சூழ்நிலையில் கவுன்ட்டி போட்டியில் விளையாட வேண்டும் என்ற எண்ணம் பும்ராவுக்கு இருக்கக்கூடாது என்று அக்ரம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வாசிம் அக்ரம் கூறுகையில் ‘‘இன்றைய காலக்கட்டத்தில் கிரிக்கெட் அதிகமாகவிட்டது. பும்ரா போன்ற இந்தியாவின் நம்பர் ஒன், உலகின் தலைசிறந்த பந்து வீச்சாளர்களுக்கு நான் சொல்வது, ரிலாக்ஸ் ஆக இருக்க வேண்டும். கவுன்ட்டி கிரிக்கெட்டை நோக்கி ஓடக்கூடாது என்பதுதான். இளம் வீரர்கள் முதல் தர போட்டியில் அதிக அளவில் விளையாட வேண்டும். அங்கிருந்துதான் பந்து வீச்சு குறித்து கற்றக் கொள்ள முடியும்.

டி20 கிரிக்கெட் அற்புதமானது. சிறந்த பொழுதுபோக்கு விளையாட்டு. அதிகமான பணம் கிடைக்கும். ஆனால், டி20 கிரிக்கெட் மூலம் பந்து வீச்சை கற்றுக்கொள்ள முடியாது. டி20-யில் விளையாடுவதை வைத்து வீரர்களின் தரத்தை அறிய முடியும் என்று நான் நினைக்கவில்லை. முதல்-தர கிரிக்கெட், டெஸ்ட் கிரிக்கெட்டை வைத்துதான் ஒரு வீரரின் தரத்தை தெரிந்து கொள்ள முடியும்.
Tags:    

Similar News