செய்திகள்
ஷபியுல்லா ஷபிக்

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரருக்கு 6 ஆண்டு தடை

Published On 2020-05-11 04:14 GMT   |   Update On 2020-05-11 04:14 GMT
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ஷபியுல்லா ஷபிக் சூதாட்டத்தில் ஈடுபட்டதால் அவருக்கு கிரிக்கெட் மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட 6 ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.
காபூல்:

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ஷபியுல்லா ஷபிக். 30 வயதான ஷபிக் ஆப்கானிஸ்தான் அணிக்காக 24 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 2 அரைசதம் உள்பட 430 ரன்களும், 46 இருபது ஓவர் ஆட்டங்களில் 494 ரன்களும் எடுத்துள்ளார். கடைசியாக 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அந்த அணிக்காக விளையாடி இருந்தார்.

கடந்த ஆண்டு நடந்த வங்காளதேச பிரிமீயர் லீக் 20 ஓவர் போட்டியின் போது அவர் சூதாட்ட தரகர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு மேட்ச் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட முயற்சித்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் 2018-ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் பிரிமீயர் லீக்கிலும் தில்லாலங்கடி வேலையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து அவர் மீது ஊழல் தடுப்பு பிரிவின் கீழ் 4 வகையான குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. தன் மீதான புகாரை அவரும் ஒப்புக்கொண்டார். இது குறித்து விசாரணை மேற்கொண்ட ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி அவருக்கு கிரிக்கெட் மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட 6 ஆண்டு தடை விதித்து நேற்று உத்தரவிட்டது.
Tags:    

Similar News