செய்திகள்
இந்தியா ஏ அணி வீரர்கள்

இந்தியா ‘ஏ’ அணிக்கெதிரான டெஸ்ட்: நியூசிலாந்து ‘ஏ’ முதல் நாள் ஆட்ட முடிவில் 276/5

Published On 2020-02-07 09:58 GMT   |   Update On 2020-02-07 09:58 GMT
நான்கு நாட்கள் கொண்ட 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா ‘ஏ’ அணிக்கெதிராக நியூசிலாந்து ‘ஏ’ முதல் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 276 ரன்கள் சேர்த்துள்ளது.
  • டாஸ் வென்ற நியூசிலாந்து ஏ பேட்டிங் தேர்வு.
  • இந்தியா ஏ அணியில் புஜாரா, அஸ்வின், ரகானே.
  • நியூசிலாந்து வீரர் பிலிப்ஸ் அரைசதம். சிராஜ் மற்றும் அவேஷ் கான் தலா இரண்டு விக்கெட்

இந்தியா ‘ஏ’ - நியூசிலாந்து ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான நான்கு நாட்கள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற  2-வது டெஸ்ட் லிங்கோனில் இன்று தொடங்கியது. நியூசிலாந்து ‘ஏ’ அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இதற்கு பயிற்சியாக இருக்கும் வகையில் ரகானே, அஸ்வின், புஜாரா ஆகியோர் இந்திய ‘ஏ’ அணியில் இடம் பிடித்துள்ளனர்.

நியூசிலாந்து ‘ஏ’ அணியின் கேப்டன் ரூதர்போர்டு, யங் ஆகியோர் தொடக்க வீரர்களாக கம் இறங்கினர். யங் 26 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரவிந்த்ரா 12 ரன்னில் வெளியேறினார். ரூதர்போர்டு 40 ரன்னில் ஆட்டமிழந்தார். பிலிப்ஸ் 65 ரன்கள் விளாசினார். செய்பெர்ட் 30 ரன்கள் சேர்த்தார்.

6-வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய விக்கெட் கீப்பர் கிளவர், மிட்செல் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கிளவர் 46 ரன்களும், மிட்செல் 36 ரன்களும் சேர்த்து முதல்நாள் ஆட்டம் முடியும் வர ஆட்டமிழக்காமல் இருக்க நியூசிலாந்து ‘ஏ’ ஐந்து விக்கெட் இழப்பிற்கு 276 ரன்கள்  சேர்த்துள்ளது.

இந்திய அணி சார்பில் முகமது சிராஜ், அவேஷ் கான் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினர். இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஆட்டம் டிராவில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News