செய்திகள்
ஷ்ரேயாஸ் அய்யர்

ஜஸ்ட் ஒரு தோல்விதான், இதில் இருந்து மீண்டு வருவோம்: ஷ்ரேயாஸ் அய்யர்

Published On 2020-02-06 14:36 GMT   |   Update On 2020-02-06 14:36 GMT
347 ரன்கள் எடுத்து தோல்வியடைந்த போதிலும், அடுத்த முறை வீறுகொண்டு எழுவோம் என்று ஷ்ரேயாஸ் அய்யர் தெரிவித்துள்ளார்.
ஹாமில்டனில் நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஷ்ரேயாஸ் அய்யரின் சிறப்பான சதத்தால் இந்தியா 347 ரன்கள் குவித்தது. ஆனால் ராஸ் டெய்லர், டாம் லாதம் ஆகியோரின் அதிரடியால் நியூசிலாந்து ஒரு ஓவர் மீதமுள்ள நிலையில் 348 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்த தோல்வியை இந்திய ரசிகர்களால் ஜீரணிக்க முடியவில்லை. 347 ரன்கள் எடுத்தும் இந்தியா தோற்றுவிட்டதே என வருத்தப்படுகிறார்கள்.

ஆனால் சதம் அடித்த ஷ்ரேயாஸ் அய்யர், இது ஜஸ்ட் ஒரு தோல்விதான் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஷ்ரேயாஸ் அய்யர் கூறுகையில் ‘‘சதம் அடித்தது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. ஆனால், அணி வெற்றி பெற்றிருந்தால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருப்பேன்.

முதல் போட்டியில் தோல்வியடைந்தது மிகப்பெரிய விஷயம் இல்லை. ஏனென்றால் ஜஸ்ட் அது ஒரு தோல்வி. எங்களுடைய வாழ்க்கையில் இதுபோன்ற சூழ்நிலைகளை முன்னதாக சந்தித்து இருக்கிறோம். ஒரு அணியாக எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. அடுத்த போட்டியில் மிகப்பெரிய அளவில் வலுவாக திரும்புவோம். கடந்த காலங்களில் இதுபோன்று செய்திருக்கிறோம்.

இந்த போட்டியை நேர்மறையாக எடுத்துக் கொண்டு அதில் இருந்து முன்னோக்கி செல்ல வேண்டும். இந்திய ‘ஏ’ அணியில் விளையாடிய அனுபவம் கைக்கொடுத்தது. அங்கு நான் எப்போதும் 4-வது இடத்தில் களம் இறங்கவில்லை. சூழ்நிலைக்கு ஏற்க மாறுபட்ட இடத்தில் களம் இறங்கி விளையாட வேண்டிய நிலை ஏற்படும்.

மணிஷ் பாண்டே 4-வது இடத்தில் களம் இறங்குகிறார். நம்முடைய இடம் என்று எடுத்துக் கொள்ள முடியாது. அவரை நாங்கள் இந்தியா ‘ஏ’ அணியின் லிஜெண்ட் என்று அழைப்போம். 3-வது இடத்தில் இருந்து 5-வது இடத்திற்குள் களம் இறங்க வேண்டும் என்பதை நிர்ணயித்துக் கொள்வேன். இதனால் அங்கு எனக்கு சிறந்த பயிற்சி கிடைத்தது’’ என்றார்.
Tags:    

Similar News