செய்திகள்
கோப்பு படம்

ஐ.எஸ்.எல். கால்பந்து - கொல்கத்தா 8-வது வெற்றியை பெறுமா? கவுகாத்தி அணியுடன் இன்று மோதல்

Published On 2020-01-27 06:31 GMT   |   Update On 2020-01-27 08:28 GMT
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 68-வது ஆட்டத்தில் அட்லெடிகோ கொல்கத்தா- நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் இன்று மோதுகின்றன.
கொல்கத்தா:

ஐ.எஸ்.எல். என்று அழைக்கப்படும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 68-வது ஆட்டம் கொல்கத்தாவில் இன்று நடக்கிறது. இதில் 2 முறை சாம்பியனான அட்லெடிகோ கொல்கத்தா- நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி) அணிகள் மோதுகின்றன.

கொல்கத்தா 7 வெற்றி, 3 டிரா, 3 தோல்வியுடன் 24 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளது. அந்த அணி 8-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

கவுகாத்தி அணி 2 வெற்றி, 5 டிரா, 4 தோல்வியுடன் 11 புள்ளிகள் பெற்று 9-வது இடத்தில் உள்ளது. அந்த அணி 3-வது வெற்றிக்காக காத்திருக்கிறது.

Tags:    

Similar News