செய்திகள்
சாம்பியன் பட்டம் வென்ற பிரிஸ்பேன் ஹீட் பெண்கள் அணி

பெண்கள் பிக் பாஷ் டி20 கிரிக்கெட்: பிரிஸ்பேன் ஹீட் 2-வது முறையாக சாம்பியன்

Published On 2019-12-08 10:30 GMT   |   Update On 2019-12-08 10:30 GMT
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பெண்கள் பிக் பாஷ் டி20 லீக் இறுதிப் போட்டியில் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணியை வீழ்த்தி பிரிஸ்பேன் ஹீட் சாம்பியன் பட்டம் வென்றது.
ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கான பிக் பாஷ் டி20 லீக் தொடர் நடைபெற்று வந்தது, பிரிஸ்பேனில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் பிரிஸ்பேன் ஹீட் - அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்ற பிரிஸ்பேன் ஹீட் பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீராங்கனை சுஜியி பேட்ஸ் (27), அடுத்து வந்த தஹிலா மெக்ராத் (33), அமாண்டா-ஜேட் வெலிங்டன் (33 பந்தில் 55 ரன்) ஆகியோரின் ஆட்டத்தால் அடிலெய்டி 7 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் குவித்தது.

பின்னர் 162 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பிரிஸ்பேன் ஸ்டிரைக்கர்ஸ் 18.1 ஓவரில் 4 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 162 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தொடக்க வீராங்கனை பெத் மூனே ஆட்டமிழக்காமல் 56 ரன்களும், ஜொனாஸ்சென் 33 ரன்களும் சேர்த்தனர்.

இந்த வெற்றியின் தொடர்ச்சியாக 2-வது முறையாக அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
Tags:    

Similar News