செய்திகள்

அந்த்ரே ரஸல் மீது அதிக கவனம் செலுத்த மாட்டோம்: சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங்

Published On 2019-04-08 15:25 GMT   |   Update On 2019-04-08 15:25 GMT
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அதிரடி மன்னன் அந்த்ரே ரஸல் மீது அதிக கவனம் செலுத்த மாட்டோம் என்று சிஎஸ்கே பயிற்சியாளர் பிளெமிங் தெரிவித்துள்ளார். #IPL2019 #CSK
ஐபிஎல் தொடரின் 23-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அந்த்ரே ரஸலின் அதிரடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் முற்றுப்புள்ளி வைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், ரஸலை பற்றி அதிக அளவில் கவனம் செலுத்த மாட்டோம் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியளார் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.



இதுகுறித்து ஸ்டீபன் பிளெமிங் கூறுகையில் ‘‘கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை பொறுத்த வரையில் இரண்டு மூன்று சவால்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று மற்ற ஆறு பேட்ஸ்மேன்கள் நிராகரித்து விடுவது. அந்த அணியில் கிறிஸ் லின், தினேஷ் கார்த்திக், உத்தப்பா போன்றோரும் உள்ளனர். இதை நாங்கள் கவனித்தில் எடுத்துக்கொள்வோம். ரஸல் மீது அதிக கவனம் செலுத்தமாட்டோம்.

ரஸல் சிறப்பாக விளையாடி வருகிறார். இருந்தாலும் எங்களுடைய திட்டம் ஒன்று அல்லது இரண்டு வீரர்களுக்கு எதிராக என மாறாது. ஆனால் கொல்கத்தா வீரர்கள் அபாயகரமானவர்கள் என்பதை நாங்கள் அறிந்து வைத்துள்ளோம்.
Tags:    

Similar News