செய்திகள்

இந்தியாவுடனான பெண்கள் டி20 கிரிக்கெட் : 3வது போட்டியிலும் இங்கிலாந்து வெற்றி

Published On 2019-03-09 12:00 GMT   |   Update On 2019-03-09 12:00 GMT
இந்தியாவுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து மகளிர் அணி, இந்தியாவை ஒயிட் வாஷ் செய்தது. #INDWvENGW
இந்தியா - இங்கிலாந்து பெண்கள் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி இன்று கவுகாத்தியில் நடைபெற்றது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுக்கு 119 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் தொடக்க வீராங்கனைகள் வியாட் 24 ரன்களும், டாமி பியூமோன்ட் 29 விக்கெட் கீப்பர் எமி எல்லன் ஜோன்ஸ் 26 ரன்களும் எடுத்தனர்.

அதன்பின், 120 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. தொடக்க வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா 58 ரன் எடுத்தார். மிதாலி ராஜ் 30 ரன்னுடன் அவுட்டாகாமல் இருந்தார். மற்றவர்கள் நிலைத்து நிற்கவில்லை.

ஆட்டத்தின் கடைசி ஓவரில் 3 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் இந்திய அணி ஒரு ரன் மட்டுமே எடுத்தது. இறுதியில், இந்தியா 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 118 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து, ஒரு ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதுடன், தொடரையும் 3- 0 என கைப்பற்றியது.
#INDWvENGW
Tags:    

Similar News