செய்திகள்

ஒரு நாள் கிரிக்கெட்டில் 24 சிக்சர் அடித்து இங்கிலாந்து உலக சாதனை

Published On 2019-02-28 06:12 GMT   |   Update On 2019-02-28 06:12 GMT
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் 24 சிக்சர் அடித்து இங்கிலாந்து அணி உலக சாதனை படைத்துள்ளது. #ENGvWI
செயின்ட் ஜார்ஜ்:

இங்கிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி செயின்ட் ஜார்ஜில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 418 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இங்கிலாந்தின் சிறந்த ஸ்கோர் இதுவாகும். கேப்டன் மோர்கன் (103 ரன், 88 பந்து, 8 பவுண்டரி, 6 சிக்சர்), விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் (150 ரன், 77 பந்து, 13 பவுண்டரி, 12 சிக்சர்) சதமும், பேர்ஸ்டோ (56 ரன்), அலெக்ஸ் ஹாலெஸ் (82 ரன்) அரைசதமும் அடித்தனர். இங்கிலாந்து தரப்பில் மொத்தம் 24 சிக்சர்கள் அடிக்கப்பட்டன. ஒரு நாள் போட்டி வரலாற்றில் ஒரு இன்னிங்சில் விளாசப்பட்ட அதிகபட்ச சிக்சர் இது தான். இதற்கு முன்பு இதே தொடரில் முதலாவது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் 23 சிக்சர் அடித்ததே சாதனையாக இருந்தது.

பின்னர் 419 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. #ENGvWI
Tags:    

Similar News