செய்திகள்

434 விக்கெட்- கபில்தேவ் சாதனையை சமன்செய்த ஸ்டெய்ன்

Published On 2019-02-14 08:02 GMT   |   Update On 2019-02-14 08:02 GMT
தென் ஆப்பிரிக்கா- இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் நேற்று டர்பனில் தொடங்கியது. இந்த போட்டியின் போது திரிமானே விக்கெட்டை ஸ்டெய்ன் வீழ்த்தியபோது கபில்தேவின் சாதனையை அவர் சமன் செய்தார். #Steyn #SAvSL #kapildev

டர்பன்:

இலங்கை கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவரில் விளையாடு வதற்காக தென் ஆப்பிரிக்கா சென்றுள்ளது.

தென் ஆப்பிரிக்கா- இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி டர்பனில் நேற்று தொடங்கியது. முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா இலங்கையுடன் அனுபவமற்ற பந்து வீச்சால் திணறியது. அந்த அணி 235 ரன்னில் சுருண்டது. குயின்டன் டி காக் அதிகபட்சமாக 80 ரன்னும், பவுமா 47 ரன்னும் எடுத்தனர். பெர்னாண்டோ 4 விக்கெட்டும், ரஜினதா 3 விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இலங்கை நேற்றைய முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 49 ரன் எடுத்து இருந்தது. திரிமானே ரன் எதுவும் எடுக்காமல் ஸ்டெய்ன் பந்தில் ஆட்டம் இழந்தார்.

இந்த விக்கெட் மூலம் கபில்தேவின் சாதனையை ஸ்டெய்ன் சமன் செய்தார். கபில்தேவ் 131 டெஸ்டில் 434 விக்கெட் கைப்பற்றி அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்களில் 8-து இடத்தில் இருந்தார். ஸ்டெய்ன் 92 டெஸ்டில் 434 விக்கெட் கைப்பற்றி அவரை சமன் செய்துள்ளார்.

அதிக விக்கெட் கைப்பற்றிய வேகப்பந்து வீரர்களில் 5-வது இடத்துக்கும், ஒட்டு மொத்தமாக 8-வது இடத்துக்கும் முன்னேறி உள்ளார்.

இன்றைய ஆட்டத்தில் அவர் விக்கெட்டுகளை கைப்பற்றும் போது மேலும் முன்னேற்றம் அடைவார். #Steyn #SAvSL #kapildev

Tags:    

Similar News