செய்திகள்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் - வெஸ்ட் இண்டீஸ் அணி 154 ரன்னில் சுருண்டது

Published On 2019-02-11 07:01 GMT   |   Update On 2019-02-11 07:01 GMT
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 154 ரன்னில் சுருண்டது. மார்க்வுட் 41 ரன் கொடுத்து 5 விக்கெட்டை வீழ்த்தினார். #WIvENG
செயின்ட் லூசியா:

வெஸ்ட் இண்டீஸ்-இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி செயின்ட் லூசியாவில் உள்ள கிராஸ் ஐ லெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

முதலில் விளையாடிய இங்கிலாந்து முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 231 ரன் எடுத்து இருந்தது. நேற்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது.

தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி 277 ரன் குவித்து ‘ஆல்அவுட்’ ஆனது. பென் ஸ்டோக்ஸ் 79 ரன்னும், பட்லர் 67 ரன்னும் எடுத்தனர். கேமர் ரோச் 4 விக்கெட்டும், கேப்ரியல், அல்ஜாரி ஜோசப், பவுல் தலா 2 விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்து வீரர்களின் அபாரமான பந்து வீச்சால் திணறியது. அந்த அணி 47.2 ஓவர்களில் 154 ரன்னில் சுருண்டது. கேம்பெல் அதிகபட்சமாக 41 ரன்னும், டவுரிச் 38 ரன்னும் எடுத்தனர். மார்க்வுட் 41 ரன் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். மொய்ன் அலி 4 விக்கெட்டும், ஸ்டூவாட் பிராட் 1 விக்கெட்டும் எடுத்தனர்.

123 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து நேற்றைய ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 19 ரன் எடுத்து இருந்தது.  #WIvENG


Tags:    

Similar News