செய்திகள்

2-வது டெஸ்ட் போட்டி: நியூசிலாந்து 178 ரன்னில் சுருண்டது- இலங்கையும் திணறல்

Published On 2018-12-26 09:31 GMT   |   Update On 2018-12-26 09:31 GMT
கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்டில் நியூசிலாந்து 176 ரன்னில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கையும் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்தது. #NZvSL
இலங்கை கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று கிறிஸ்ட்சர்ச் நகரில் தொடங்கியது.

டாஸ் ஜெயித்த இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அந்த அணியின் அபார பந்து வீச்சில் நியூசிலாந்து திணறியது. 64 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டை இழந்து தடுமாறியது. அதன்பின் வந்த பந்து வீச்சாளர் டிம் சவுத்தி அதிரடியாக விளையாடினார். அவர் 65 பந்தில் 68 ரன் அடித்தார். இதில் 6 பவுண்டரி, 3 சிக்சர் அடங்கும்.

இவரது ஆட்டத்தால் நியூசிலாந்து அணி 50 ஓவரில் 178 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. இலங்கை தரப்பில் லக்மல் 5 விக்கெட்டும், குமாரா 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.



பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இலங்கை அணியும் திணறியது. பேட்டிங்கில் ஜொலித்த டிம் சவுத்தி பந்து வீச்சிலும் அசத்தினார். குணதிலகா (8), கருணாரத்னே (7), சண்டிமல் (6) ஆகியோரை அடுத்தடுத்து வெளியேற்றினார். இதனால் 21 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று விக்கெட்டுக்களை இழந்து திணறியது இலங்கை.



மெண்டிஸ் 15 ரன்னில் ஆட்டமிழந்தார். 5-வது விக்கெட்டுக்கு மேத்யூஸ் உடன் சில்வா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி முதல்நாள் ஆட்டம் முடியும் வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக்கொண்டது. இலங்கை முதல்நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 88 ரன்கள் சேர்த்துள்ளது. மேத்யூஸ் 27 ரன்னுடனும், சில்வா 15 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
Tags:    

Similar News