செய்திகள்

ஐசிசி டெஸ்ட் தரவரிசை: ஆண்டர்சன் சறுக்கல், 14 விக்கெட் வீழ்த்திய யாசிர் ஷா அதிரடி முன்னேற்றம்

Published On 2018-11-28 16:00 GMT   |   Update On 2018-11-28 16:00 GMT
ஐசிசி டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் முதல் இடத்தில் இருந்த ஆண்டர்சன் 2-வது இடத்திற்கு சரிந்துள்ளார். யாசிர் ஷா 10 இடத்திற்குள் நுழைந்துள்ளார். #ICCTestRankings
இலங்கை - இங்கிலாந்து இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் சமீபத்தில் முடிவடைந்தது. இதில் இங்கிலாந்து 3-0 என இலங்கையை துவம்சம் செய்தது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஒரேயொரு விக்கெட் மட்டுமே வீழ்த்தினார். இதனால் ஐசிசி தரவரிசையில் முதல் இடத்தில் இருந்து 2-வது இடத்திற்கு சரிந்துள்ளார். தென்ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ரபாடா 2-வது இடத்தில் இருந்து முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டில் நியூசிலாந்தும், 2-வது டெஸ்டில் பாகிஸ்தானும் வெற்றி பெற்றது.

2-வது டெஸ்டில் பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளரான யாசிர் ஷா முதல் இன்னிங்சில் 41 ரன்கள் விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் 143 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டும் என 14 விக்கெட்டுக்கள் சாய்த்தார். இதனால் 19-வது இடத்தில் இருந்து 10-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.



டிரென்ட் போல்ட் 6-வது இடத்தில் இருந்து 8-வது இடத்திற்கு சரிந்துள்ளார். பேட் கம்மின்ஸ் 6-வது இடத்திலும், அஸ்வின் 7-வது இடத்திலும் உள்ளனர்.
Tags:    

Similar News