செய்திகள்

ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு ஐசிசி கண்டிப்பு- தடைக்கான ஒரு புள்ளியும் வழங்கப்பட்டது

Published On 2018-11-08 13:53 GMT   |   Update On 2018-11-08 13:53 GMT
கோபத்தில் பந்தை தூக்கி எறிந்த இங்கிலாந்து கேப்டன் ஜேம்ஸ் ஆண்டர்சனை ஐசிசி கண்டித்துள்ளது. அத்துடன் தடைக்கான ஒரு புள்ளியும் வழங்கப்பட்டது. #SLvENG
இலங்கை - இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலேயில் நடைபெற்று வருகிறது. இலங்கை அணி பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது ஜேம்ஸ் ஆண்டர்சன் 39-வது ஓவரை வீசினார். இந்த ஓவரின்போது, ஆடுகளத்தின் அபாயகரமான பகுதி (Danger)-யில் ஓடியதாக நடுவர் எச்சரித்தார்.



இதனால் கோபம் அடைந்த ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தை கோபமாக தூக்கி எறிந்தார். இதுகுறித்து போட்டி நடுவரிடம் புகார் அளிக்கப்பட்டது. போட்டி முடிந்த பின்னர், ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதனால் அவரை ஐசிசி எச்சரித்ததுடன், போட்டி தடைக்கான ஒரு புள்ளியையும் வழங்கியது. இத்துடன் ஆண்டர்சன் நான்கு புள்ளிகள் பெற்றுள்ளார்.
Tags:    

Similar News