செய்திகள்

ஜென்னிங்ஸின் அபார சதத்தால் இலங்கைக்கு 462 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இங்கிலாந்து

Published On 2018-11-08 11:40 GMT   |   Update On 2018-11-08 11:41 GMT
2-வது இன்னிங்சில் ஜென்னிங்ஸ் அபாரமாக விளையாடி சதம் அடிக்க இலங்கைக்கு 462 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது இங்கிலாந்து. #SLvENG
இலங்கை - இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இங்கிலாந்து அறிமுக வீரர் பென் போக்ஸ் (107) சதத்தால் 342 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை மொயீன் அலியின் (4) அபார பந்து வீச்சால் 203 ரன்னில் சுருண்டது.

பின்னர் 139 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் பேர்ன்ஸ் 23 ரன்னிலும், மொயீன் அலி, ஜோ ரூட் ஆகியோர் தலா 3 ரன்னிலும் வெளியேறினார்கள்.

அதன்பின் தொடக்க வீரர் ஜென்னிங்ஸ் உடன் பென் ஸ்டோக்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பென் ஸ்டோக்ஸ் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜென்னிங்ஸ் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். இங்கிலாந்து 6 விக்கெட் இழப்பிற்கு 322 ரன்கள் எடுத்திருக்கும்போது இங்கிலாந்து 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது.



ஜென்னிங்ஸ் 146 ரன்னுடனும், சாம் குர்ரான ரன்ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். இலங்கை அணி சார்பில் தில்ருவான் பெரேரா, ஹெராத் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

ஒட்டுமொத்தமாக இங்கிலாந்து (139+322) 461 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனால் இலங்கை அணியின் வெற்றிக்கு 462 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. 462 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இலங்கை 2-வது இன்னிங்சை தொடங்கியுள்ளது.
Tags:    

Similar News