செய்திகள்

டி20-யில் விரைவாக ஆயிரம் ரன்- விராட் கோலி சாதனையை முறியடித்தார் பாபர் ஆசம்

Published On 2018-11-05 08:04 GMT   |   Update On 2018-11-05 08:04 GMT
நியூசிலாந்துக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தின்போது 48 ரன்கள் அடித்தபோது பாபர் ஆசம் அதிவேகமாக 1000 ரன்கள் அடித்து சாதனைப் படைத்துள்ளார். #PAKvNZ #BabarAzam
பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி துபாயில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் பாபர் ஆசம் 58 பந்தில் 7 பவுண்டரி, 2 சிக்சருடன் 79 ரன்கள் குவித்தார்.

48 ரன்னைத்தொடும்போது டி20 போட்டியில் 26 இன்னிங்சில் 1000 ரன்னைத் தொட்டார். இதன்மூலம் அதிவேகமாக 1000 ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன் இந்திய அணி கேப்டன் விராட் கோலி 27 இன்னிங்சில் 1000 ரன்கள் அடித்திருந்தார். தற்போது பாபர் ஆசம் விராட் கோலி சாதனையை முறியடித்துள்ளார்.

பாபர் ஆசம் 26 போட்டியில் 26 இன்னிங்சிலும் பேட்டிங் செய்து 1031 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 54.26 ஆகும். 8 முறை அரைசதம் அடித்துள்ளார்.

62 டி20 போட்டியில் 58 இன்னிங்சில் பேட்டிங் செய்துள்ள விராட் கோலி 2102 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 48.88 ஆகும். 18 முறை அரைசதம் அடித்துள்ளார்.
Tags:    

Similar News