செய்திகள்

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கியில் ஓமனை வீழ்த்தியது ஜப்பான் - அரையிறுதியில் இந்தியாவுடன் மோதுகிறது

Published On 2018-10-26 03:46 GMT   |   Update On 2018-10-26 03:46 GMT
ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டியில் கடைசி லீக் ஆட்டத்தில் ஓமனை வீழ்த்திய ஜப்பான் அணி, அரையிறுதியில் நடப்பு சாம்பியன் இந்தியாவை எதிர்கொள்கிறது. #AsianChampionsTrophy2018
ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கிப் போட்டி ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடைபெற்று வருகிறது. இதில் ஜப்பான் அணி தனது கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் உள்ளூர் அணியான ஓமனை எதிர்கொண்டது. இதில் ஜப்பான் 5 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியுடன் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்தன. இந்த சுற்று முடிவடைவதற்கு முன்னதாகவே புள்ளிகள் அடிப்படையில் இந்தியா, மலேசியா, பாகிஸ்தான், ஜப்பான் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. அதன்பின்னர் லீக் சுற்று முடிந்ததும் அரையிறுதியில் விளையாடும் அணிகள் முடிவு செய்யப்பட்டன.



அதன்படி நாளை நடைபெறவுள்ள இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஜப்பான் அணி, நடப்பு சாம்பியனான இந்தியாவை எதிர்கொள்கிறது. முதல் அரையிறுதியில் மலேசியா-பாகிஸ்தான் அணிகள் விளையாட உள்ளன. #AsianChampionsTrophy2018 #HockeyIndia #IndianHockey
Tags:    

Similar News