செய்திகள்

இந்தியாவிற்கு 253 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஆப்கானிஸ்தான்

Published On 2018-09-25 15:12 GMT   |   Update On 2018-09-25 15:12 GMT
முகமது ஷேசாத், முகமது நபி ஆகியோரின் அபார ஆட்டத்தால் இந்தியாவின் வெற்றிக்கு --- ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது ஆப்கானிஸ்தான் #AsiaCup2018 #INDvAFG
ஆசிய கோப்பையில் இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முகமது ஷேசாத், ஜாவித் அஹ்மதி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

அஹ்மதி மிகவும் மந்தமாக விளையாடிய நிலையில் முகமது ஷேசாத் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பந்து பவுண்டரிக்கும், சிக்சருக்கும் என பறந்தது. ஒருபுறம் ஷேசாத் அபாரமாக விளையாடினாலும் மறுமுனையில் விக்கெட்டுக்கள் விழுந்த வண்ணமே இருந்தது.

ஆட்டத்தின் 29-வது ஓவரை சாஹர் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டி முகமது ஷேசாத் 88 பந்தில் 10 பவுண்டரி, 6 சிக்சருடன் சதம் அடித்தார்.



தொடர்ந்து விளையாடிய ஷேசாத் 116 பந்தில் 11 பவுண்டரி, 7 சிக்சருடன் 124 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். நைப் 15 ரன்களும், நஜிமுல்லா சத்ரன் 20 ரன்களும் அடித்தனர். முகமது நபி சிறப்பாக விளையாடி 56 பந்தில் 64 ரன்கள் விளாசினார். முகமது ஷேசாத், முகமது நபி ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் ஆப்கானிஸ்தான் 50 ஒவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் சேர்த்தது.



இதனால் இந்தியாவின் வெற்றிக்கு 253 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. இந்திய அணி சார்பில் ஜடேஜா 3 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
Tags:    

Similar News