செய்திகள்

பாகிஸ்தானுக்கு எதிராக மூன்று ஸ்பின்னர்களுடன் களம் இறங்க வாய்ப்புள்ளது- நாதன் லயன்

Published On 2018-09-24 08:28 GMT   |   Update On 2018-09-24 08:28 GMT
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்க வாய்ப்பு உள்ளதாக லயன் தெரிவித்துள்ளார். #PAKvENG
ஆஸ்திரேலியா டெஸ்ட் அணி ஆசியா கண்டத்தில் பெரிய அளவில் சாதித்தது கிடையாது. பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இரு நாடுகளுக்கு இடையிலான தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வருகிறது.

அடுத்த மாதம் ஆஸ்திரேலியா ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பாகிஸ்தானுக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அப்போது ஆஸ்திரேலியா மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்க வாய்ப்புள்ளதாக ஆஸ்திரேலியாவின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நாதன் லயன் கூறுகையில் ‘‘இந்தியாவிற்கு எதிராக நாங்கள் புனே டெஸ்டில் விளையாடும்போது அந்த ஆடுகளம் முற்றிலும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது. அதுபோன்று ஆடுகளம் அமைக்கப்பட்டால், நாங்கள் ஏன் மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாடக்கூடாது?.


டிராவிஸ் ஹெட்

ஆனால் நாங்கள் கடந்த முறை சென்றிருந்த போது ஆடுகளம் பிளாட்டாக இருந்தது. தற்போது நாங்கள் மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்க தயாராகுவோம். இருந்தாலும், அங்குள்ள கண்டிசனை பார்க்கும்வரை உறுதியாக கூறுவது கடினம்.

என்னைத் தவிர மார்னஸ் லபுஸ்சேக்னே, டிராவிஸ் ஹெட் ஆகியோரும் உள்ளனர். இவர்கள் ஐந்தாவது மற்றும் 6-வது வரிசையில் பேட்டிங் செய்வார்கள். நன்றாக பந்தும் வீசுவார்கள்’’ என்றார்.
Tags:    

Similar News