செய்திகள்

காயத்தால் கவுன்ட்டி கிரிக்கெட்டில் இருந்து அஸ்வின் விலகல்

Published On 2018-09-11 16:28 IST   |   Update On 2018-09-11 16:28:00 IST
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் காயம் காரணமாக இங்கிலாந்து கவுன்ட்டி போட்டியில் இருந்து விலகியுள்ளார். #Ashwin
இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. டிரென்ட் பிரிட்ஜியில் நடைபெற்ற 3-வது டெஸ்டின்போது இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஸ்வினுக்கு காயம் ஏற்பட்டது.

ஆனால் சவுத்தாம்ப்டனில் நடைபெற்ற 4-வது டெஸ்டில் விளையாடினார். அஸ்வின் காயம் முழுமையாக குணமடையாமலே விளையாடினார் என்று கூறப்படுகிறது. இதனால் அவரது காயத்தின் வீரியம் அதிகமானது. இதனால் கடைசி டெஸ்டில் அவர் இடம்பெறவில்லை.



இதற்கிடையே கவுன்ட்டி கிரிக்கெட்டில் வொர்செஸ்டர்ஷைர் அணிக்காக விளையாடி முடிவு செய்திருந்தார். தற்போது காயத்தால் கவுன்ட்டி போட்டியில் இருந்து விலகியுள்ளார். கடந்த சீசனில் அஸ்வின் வொர்செஸ்டர்ஷைர் அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News