செய்திகள்

ஆப்கானிஸ்தான் ப்ரீமியர் லீக்- அப்ரிடி, கெய்ல், மெக்கல்லம், ரஸல், ரஷித் கான் ஐகான் வீரர்களாக அறிவிப்பு

Published On 2018-09-11 15:48 IST   |   Update On 2018-09-11 15:48:00 IST
ஆப்கானிஸ்தான் ப்ரீமியர் லீக்கில் ஐந்து அணிகள் பங்கேற்கின்றன. அப்ரிடி, கெய்ல், மெக்கல்லம், ரஸல், ரஷித் கான் ஐகான் வீரர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். #APL
இந்தியா, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், வங்காள தேச கிரிக்கெட் வாரியங்கள் டி20 லீக் தொடரை நடத்துவது போல் தற்போது ஆப்கானிஸ்தானும் ப்ரீமியர் லீக் டி20 தொடரை நடத்த உள்ளது.

இந்த தொடர் அக்டோபர் ஐந்தாம் தேதி தொடங்குகிறது. இதில் பாக்டியா, காபுல், பால்க், நங்கர்ஹார், கந்தஹார் ஆகிய அணிகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டி20 ஸ்பெஷலிஸ்ட் ஆன ஷாகித் அப்ரிடி, கிறிஸ் கெய்ல், ரஷித் கான், அந்த்ரே ரஸல், பிராண்டன் மெக்கல்லம் ஆகியோர் ஐகான் வீரர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதில் உலகின் முன்னணி வீரர்கள் பலர் கலந்து கொள்ள இருக்கிறார்கள். ஒவ்வொரு அணியிலும் குறைந்தது ஐந்து வெளிநாட்டு வீரர்கள் இடம்பெற வேண்டும்.
Tags:    

Similar News