செய்திகள்

ஆல்ரவுண்டர் பங்களிப்பை இந்திய அணி தவறவிட்டு விட்டது- எல் சிவராம கிருஷ்ணன்

Published On 2018-09-05 13:45 GMT   |   Update On 2018-09-05 13:45 GMT
இங்கிலாந்து தொடரில் ஆல்வுண்டரின் பங்களிப்பை இந்திய அணி தவறவிட்டு விட்டது என்று முன்னாள் வீரர் எல் சிவராம கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். #ENGvIND
இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தியா 1-2 என பின்தங்கிய நிலையில் 4-வது டெஸ்ட் சவுத்தாம்ப்டனில் நடைபெற்றது. இதில் இந்தியா வெற்றி பெற நல்ல வாய்ப்பு இருந்தது. ஆனால் 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து தொடரை 1-3 இழந்தது.

இந்நிலையில் ஆல்ரவுண்டரின் பங்களிப்பை இந்தியா தவற விட்டதுதான் தோல்விக்கு காரணம் என்று முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் எல் சிவராம கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.



இதுகுறித்து எல் சிவராம கிருஷ்ணன் கூறுகையில் ‘‘ஹர்திக் பாண்டியாவிற்குப் பதிலாக அணி நிர்வாகம் புவனேஸ்வர் குமாரை பயன்படுத்தியிருக்க வேண்டும். அவர் இந்திய அணிக்கு மிகப்பெரிய பூஸ்ட் ஆக இருந்திருப்பார்.



இந்தியா தொடரை இழப்பதற்கு ஆல்ரவுண்டர்களின் பங்களிப்பு முக்கிய காரணமாக அமைந்தது. ஹர்திக் பாண்டியாவை விட புவனேஸ்வர் குமார் அதிக ரன்கள் அடித்திருப்பார். அதேபோல்தான் சகா. இவர் அதிக அளவில் ‘பைஸ்’ ரன்கள் விட்டுக்கொடுத்திருக்க மாட்டார். அதேபோல் அதிக ரன்களும் குவித்திருப்பார். இருவரும் இடம் பிடித்திருந்தால் இந்தியாவை அதிக அளவில் பாதித்திருக்காது’’ என்றார்.
Tags:    

Similar News