செய்திகள்

ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்றவர்களுக்கு தமிழக அரசு தலா ரூ. 20 லட்சம் பரிசு

Published On 2018-08-27 14:58 IST   |   Update On 2018-08-27 14:58:00 IST
ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற மூன்று பேருக்கு தலா ரூ. 20 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். #AsianGames2018 #EPS
இந்தோனேசியாவின் ஜகார்த்தா மற்றும் பலெம்பாங்சில் ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பல வீரர்கள் வீராங்கனைகள் இந்தியா சார்பில் கலந்து கொண்டனர்.

ஸ்குவாஷ் பிரிவில் முன்னணி வீராங்கனைகளான தீபிகா பல்லிகல், ஜோஸ்னா சின்னப்பா ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறினார். ஆனால் அரையிறுதியில் தோல்வியடைந்ததால் வெண்கல பதக்கத்தோடு திருப்பியடைந்தார்கள்.



இந்நிலையில் பதக்கம் வென்ற இருவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்ததோடு, இருவரும் தலா 20 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.



ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் காலிறுதியில் தோல்வியடைந்த சவுரவ் கோஷலுக்கு 20 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையாக அளித்ததுடன் வாழ்த்துக்களும் தெரிவித்துள்ளார்.



10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீரர் லட்சுமணன் வெண்கல பதக்கம் வென்றார். ஆனால், வழித்தடம் மாறி ஓடியதால் பதக்கத்தை இழந்தார்.
Tags:    

Similar News