செய்திகள்

ஆசிய விளையாட்டு ஈட்டி எறிதலில் நீரஜ்சோப்ரா தங்கம் வெல்வாரா?

Published On 2018-08-27 11:34 IST   |   Update On 2018-08-27 11:34:00 IST
ஆசிய விளையாட்டில் முதல் முறையாக பங்கேற்கும் நீரஜ்சோப்ரா ஈட்டு எறிதலில் தங்கம் வெல்வாரா? என்று அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. #Asiangames #NeerajChopra
ஜகார்தா:

18-வது ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேசியாவில் உள்ள ஜகார்தா மற்றும் பாலெம்பேங் ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகிறது.

தடகளத்தில் இந்தியாவுக்கு நேற்று 3 வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. 100 மீட்டர் ஓட்டத்தில் டூட்டி சந்தும், 400 மீட்டர் ஓட்டத்தில் ஹிமாதாஸ் மற்றும் முகமது அனஸ்யக்யா ஆகியோரும் வெள்ளிப்பதக்கம் பெற்றனர்.

9-வது நாளாக இன்றும் தடகளத்தில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஈட்டி எறியும் பந்தயத்தில் நீரஜ்சோப்ரா மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.

24 வயதான அவர் உலக ஜூனியர், ஆசிய சாம்பியன் ஷிப், தெற்காசிய விளையாட்டு மற்றும் காமன் வெல்த்தில் தங்கம் வென்று இருக்கிறார். இதனால் முதல் முறையாக பங்கேற்கும் ஆசிய விளையாட்டிலும் நீரஜ்சோப்ரா தங்கம் வெல்வாரா? என்று அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. அவர் 87.43 மீட்டர் தூரம் எறிந்ததே தேசிய சாதனையாக உள்ளது.

நீரஜ்குமார் பங்கேற்கும் ஈட்டி எறிதல் போட்டி இந்திய நேரப்படி மாலை 5.15 மணிக்கு தொடங்குகிறது. மற்றொரு இந்திய வீரரான சிவபால்சிங்கும் இந்தப் பந்தயத்தில் கலந்து கொள்ளலாம்.

மேலும் இன்று நடைபெறும் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் பங்கேற்க இந்திய வீரர்கள் தருண் அய்யாசாமி, சந்தோஷ்குமார் தகுதி பெற்றுள்ளனர். இதில் தமிழகத்தை சேர்ந்த தருண் அய்யாசாமி மீது எதிர்பார்ப்பு இருக்கிறது.

இதேபோல் பெண்களுக்கான 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் அனு ராகவன், ஜானா முர்மு ஆகியோரும் பங்கேற்கிறார்கள்.

இது தவிர 3 ஆயிரம் மீட்டர் ஸ்டிபிள்சேசில் சுதாசிங், சங்கர்லால் சுவாமி ஆகியோரும் நீளம் தாண்டுதலில் நீனா, ஜேம்ஸ் நயனா ஆகியோரும், உயரம் தாண்டுதலில் சேட்டனும் கலந்து கொள்கிறார்கள்.

800 மீட்டர் தகுதி சுற்றில் இந்திய வீரர்கள் ஜின்சன் ஜான்சன், மனஜித்சிங் ஆகியோர் பங்கேற்கிறார்கள். #Asiangames #NeerajChopra
Tags:    

Similar News