செய்திகள்

ரிஷப் பந்தை வம்பிழுத்த ஸ்டூவர்ட் பிராடு - போட்டி ஊதியத்தில் 15 சதவீதம் அபராதம்

Published On 2018-08-22 00:49 GMT   |   Update On 2018-08-22 00:49 GMT
இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் விதி மீறிய காரணத்தால் இங்கிலாந்து வீரர் பிராடுக்கு போட்டி ஊதியத்தில் 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என ஐ.சி.சி. தெரிவித்துள்ளது. #ENGvIND #INDvENG #StuartBroad
டிரண்ட் பிரிட்ஜ்:

இந்தியா - இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி டிரண்ட் பிரிட்ஜில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது.

முதலில் விளையாடிய இந்திய அணி விராட் கோலி, ரகானேவின் சிறப்பான ஆட்டத்தால் முதல் இன்னிங்சில் 329 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் சர்வதேச விதிகளை மீறி நடந்து கொண்ட இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராடுக்கு 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஐ.சி.சி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆட்டத்தின் இரண்டாவது நாளில் பிராடு வீசிய பந்தில் ரிஷப் பந்த் ஆட்டம்
இழந்தார். அப்போது, பிராடு அவரை நோக்கி தகாத முறையில் சத்தம் போட்டு நடந்து கொண்டதாக தெரிகிறது. இது விதிமுறைகளை மீறியது.

இதனால், இங்கிலாந்து வீரர் பிராடுக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 15 சதவீதம் அபராதம் விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #ENGvIND #INDvENG #StuartBroad
Tags:    

Similar News