செய்திகள்

காயத்துடன் இருக்கும் விராட் கோலி அபாயகரமானவர்- இங்கிலாந்து பயிற்சியாளர்

Published On 2018-08-17 13:00 GMT   |   Update On 2018-08-17 13:00 GMT
50 சதவிகிதம் காயத்துடன் இருக்கும் விராட் கோலி அபாயகரமானவராக இருக்க முடியும் என்ற இங்கிலாந்து பயிற்சியாளர் தெரிவித்துள்ளார். #ENGvIND
இங்கிலாந்து - இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியின் நான்காவது நாள் ஆட்டத்தின்போது விராட் கோலி பீல்டிங் செய்யவில்லை. அவருக்கு முதுகுப் பகுதியில் வலி இருந்ததால் களம் இறங்கவில்லை எனக் கூறப்பட்டது.

லார்ட்ஸ் போட்டிக்குப்பின் தான் முதுகு வலியால் அவதிப்படுவதாக விராட் கோலி தெரிவித்தார். ஆனால் 3-வது டெஸ்டிற்கு முன் உடற்தகுதி பெற்று விடுவேன் என்றார். இருந்தாலும் விராட் கோலி 50 சதவிகித உடற்தகுதியுடன் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் காயத்தோடு விளையாடினாலும் விராட் கோலி அபாயகரமானவர் என்று இங்கிலாந்து பயிற்சியாளர் டிரெவர் பெய்லிஸ் தெரிவித்துள்ளார்.



இதுகுறித்து இங்கிலாந்து பயிற்சியாளர் பெய்லிஸ் கூறுகையில் ‘‘அவர் காயம் எங்களுக்கு எந்த பிரச்சனையையும் ஏற்படுத்தப்போவதில்லை. காயம் இருந்தாலும் அபாயகரமான வீரராக இருக்க முடியும். கிரிக்கெட் வரலாற்றை பார்த்தீர்கள் என்றால், காயத்தோடி விளையாடி அதிக அளவில் ரன்களும், விக்கெட்டுக்களும் வீழ்த்தியுள்ளனர்.

இதுகுறித்து நாங்கள் பெரிய அளவில் யோசிக்கவில்லை. ஆனால், ஸ்லிப் திசையில் அவரது விக்கெட்டை வீழ்த்த முயற்சிப்போம்’’ என்றார்.
Tags:    

Similar News