சினிமா செய்திகள்

ஜனநாயகன் வெற்றி பெற வாழ்த்துகள்... அப்படியே அந்த ஆசையும்... லோகேஷ் கனகராஜ்

Published On 2025-12-27 21:01 IST   |   Update On 2025-12-27 21:01:00 IST
  • ஜனநாயகன் உங்க கடைசிப் படம் என்பது வருத்தமாக இருக்கிறது.
  • மாஸ்டர் மற்றும் லியோ என் திரையுலகப் பயணத்தில் முக்கியமான படங்கள்.

ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள படம் 'ஜன நாயகன்'. இப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி வருகிற 9-ந்தேதி வெளியாக உள்ளது. இதனிடையே, 'ஜன நாயகன்' படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் இன்று நடைபெற்று வருகிறது.

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜலில் மைதானத்தில் நடைபெறும் இசை வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்து உள்ள நடிகர்கள், நடிகைகள், திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் பங்கேற்றுள்ள நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக தொடங்கியது. குறிப்பாக இயக்குனர் நெல்சன், லோகேஷ் கனகராஜ், அட்லீ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேசுகையில்:-

ஜனநாயகன் வெற்றி பெற வாழ்த்துகள். அப்படியே உங்க உங்க பெரிய ஆசையும் வெற்றி பெற வாழ்த்துகள். ஜனநாயகன் உங்க கடைசிப் படம் என்பது வருத்தமாக இருக்கிறது. இருந்தாலும், வாழ்த்துகள் அண்ணா. மாஸ்டர் மற்றும் லியோ என் திரையுலகப் பயணத்தில் முக்கியமான படங்கள் என கூறினார்.

Tags:    

Similar News