செய்திகள்

இங்கிலாந்துடனான முதல் டெஸ்டில் இந்தியா போராடி தோல்வி

Published On 2018-08-04 17:15 IST   |   Update On 2018-08-04 17:39:00 IST
இந்தியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றதுடன், டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. #ENGvIND
இங்கிலாந்து - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்றது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 287 ரன்களில் சுருண்டது.

அதன்பின், முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா, விராட் கோலியின் அபார சதத்தால் 274 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

13 ரன்கள் முன்னிலைப் பெற்ற நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. சாம் குர்ரான் அரை சதத்தால் இங்கிலாந்து 180 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

இதையடுத்து, இந்தியாவின் வெற்றிக்கு 194 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்தியா 5 விக்கெட்டுக்கு 110 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 45 ரன்களுடனும், தினேஷ் கார்த்திக் 18 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இந்நிலையில், இன்றைய ஆட்டத்தில் மேலும் 2 ரன்கள் சேர்த்த நிலையில் தினேஷ் கார்த்திக் அவுட்டானார்.

அடுத்து இறங்கிய ஹர்திக் பாண்ட்யா விராட் கோலிக்கு நல்ல ஒத்துழைப்பு வழங்கினார். அவர் ஒன்று, இரண்டு ரன்களை எடுத்தார்.

விராட் கோலி 51 ரன்கள் சேர்த்த நிலையில் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் எல்பிடபிள்யு ஆனார்.இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அடுத்து இறங்கிய மொகமது ஷமி டக் அவுட்டானார். அவரை தொடர்ந்து இஷாந்த் சர்மா 11 ரன்களில் அவுட்டானார்.

இறுதி வரை ஹர்திக் பாண்ட்யா போராடினார். அவர் 31 ரன்கள் சேர்த்த நிலையில் ஸ்டோக்ஸ் பந்து வீச்சில் அவுட்டானார். இறுதியில், இந்தியா இரண்டாவது இன்னிங்சில் 162 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பென் ஸ்டோக்ஸ் 4 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து, இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. #ENGvIND
Tags:    

Similar News