செய்திகள்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் ரஷீத் தேர்வு கேலியானது- முன்னாள் கேப்டன் வாகன் கருத்து

Published On 2018-07-27 06:08 GMT   |   Update On 2018-07-27 06:08 GMT
இங்கிலாந்து டெஸ்ட் அணியில் ஆதில்ரஷித் சேர்க்கப்பட்டுள்ளதற்கு முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் அதிருப்தி தெரிவித்து உள்ளார். #ENGvIND #AdilRashid #MichaelVaughan
லண்டன்:

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

இரு அணிகள் மோதும் 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற 1-ந்தேதி தொடங்குகிறது.

இதில் முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் சுழற்பந்து வீச்சாளர் ஆதில் ரஷீத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் 1½ ஆண்டுக்கு பிறகு அணிக்கு திரும்பி உள்ளார்.

இந்த நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் அணியில் ஆதில்ரஷித் சேர்க்கப்பட்டுள்ளதற்கு முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் அதிருப்தி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், டெஸ்ட் அணியில் ஆதில் ரஷீத் தேர்வு செய்யப்பட்டது கேலிக் குரியது.

உள்ளூரில் நடக்கும் 4 நாள் டெஸ்ட் போட்டியில் விளையாடாத ஒருவரை நாம் அணியில் சேர்த்து இருக்கிறோம். அவர் சிறப்பாக செயல்படுவாரா? மாட்டாரா? என்பதை மறந்து விடுவோம். ஆனால் இந்த முடிவை நான் கேலியதாகதான் பார்க்கிறேன்.



ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் ஆதில் ரஷீத் டெஸ்ட் அணியில் தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. #ENGvIND #AdilRashid #MichaelVaughan
Tags:    

Similar News