செய்திகள்

ரஷியா உலகக்கோப்பையை 77 லட்சம் ரசிகர்கள் நேரில் பார்த்து ரசித்துள்ளனர்

Published On 2018-07-19 15:18 GMT   |   Update On 2018-07-19 15:18 GMT
ரஷியாவில் நடைபெற்று முடிந்துள்ள உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவை 77 லட்சம் ரசிகர்கள் நேரில் பார்த்து ரசித்துள்ளனர். #WorldCup2018
உலகக்கோப்பை கால்பந்து திருவிழா ஜூன் 14-ந்தேதி முதல் ஜூலை 15-ந்தேதி வரை ரஷியாவில் நடைபெற்றது. இதில் பிரான்ஸ் வெற்றி பெற்ற கோப்பையை கைப்பற்றியது. குரோசியா 2-வது இடம் பிடித்தது.

ரஷியாவில் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் நுழைவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உண்டு. ஆனால் உலகக்கோப்பை தொடரை காண்பதற்காக ரசிகர்கள் அதிக அளவில் ரஷியா வரவேண்டும் என்பதற்காக அதிபர் புதின் பல்வேறு சலுகைகள் வழங்கினார்.



இதனால் வெளிநாட்டில் இருந்து ஏராளமான ரசிகர்கள் போட்டியை ரசிப்பதற்காக ரஷியாவில் குவிந்தனர். அதேபோல் உள்ளூர் ரசிகர்களும் அதிக அளவில் நேரில் சென்று போட்டியை ரசித்தார்கள்.



ஒட்டுமொத்த போட்டிகளையும் 77 லட்சம் ரசிகர்கள் நேரில் பார்த்து ரசித்துள்ளனர். பிரேசிலில் கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையை பார்த்த ரசிகளின் எண்ணிக்கையை விட 25 லட்சம் அதிகமாகும்.
Tags:    

Similar News