செய்திகள்

உலகக்கோப்பை கால்பந்து- பிரேசில் அணியில் இருந்து டேனிலோ விலகல்

Published On 2018-07-06 16:09 IST   |   Update On 2018-07-06 16:09:00 IST
உலகக்கோப்பை காலிறுதியில் பெல்ஜியத்தை எதிர்கொள்ள இருக்கும் நிலையில் பிரேசில் வீரர் டேனிலோ காயத்தால் விலகியுள்ளார். #WorldCup2018
உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. இன்றுமுதல் காலிறுதி ஆட்டங்கள் நடைபெறுகிறது. இன்றிரவு 11.30 மணிக்கும் தொடங்கும் 2-வது காலிறுதி போட்டியில் பிரேசில் - பெல்ஜியம் அணிகள் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன.

இதற்காக தீவிர பயிற்சியில் பிரேசில் அணி ஈடுபட்டு வந்தபோது, அந்த அணியின் டேனிலோவிற்கு முழங்கால் காயம் ஏற்பட்டது. இதனால் உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார். இந்த செய்தியை பிரேசில் கால்பந்து கான்பெடரேசன் வெளியிட்டுள்ளது.



ஏற்கனவே சுவிட்சர்லாந்திற்கு எதிரான தொடக்க ஆட்டத்தின்போது தொடைப்பகுதியில் காயம் ஏற்பட்டது. தற்போது டேனிலோவிற்குப் பதில் ஃபாக்னெர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். பிரேசில் அணியின் டேனி ஆல்வ்ஸ் அணியில் இருந்து விலகியதால் டேனிலோ இடம்பிடித்திருந்தார். தற்போது காயத்தில் உலகக்கோப்பை தொடர் முழுவதும் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. #Danilo #Fagner #DaniAlves
Tags:    

Similar News