செய்திகள்

தங்க ஷூவை வெல்வது யார்? முன்னிலை வகிக்கும் ஹாரிகேன்

Published On 2018-07-06 15:18 IST   |   Update On 2018-07-06 15:18:00 IST
உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் அதிக கோல்கள் அடிக்கும் வீரருக்கான தங்க ஷூ வெல்லும் வாய்ப்பில் இங்கிலாந்து கேப்டன் ஹாரிகேன் முன்னிலை வகிக்கிறார். #FIFA2018 #WorldCup2018 #HarryKane
உலககோப்பை கால்பந்து போட்டியில் அதிக கோல்கள் அடிக்கும் வீரருக்கு ‘கோல்டன் பூட்’ என்று அழைக்கப்படும் ‘தங்க ஷூ’ வழங்கப்படும்.

உலகின் சிறந்த வீரர்களான லியோன்ல் மெஸ்சி (அர்ஜென்டினா), சிறிஸ்டியானோ ரொனால்டோ (போர்ச்சுக்கல்) ஆகியோர் வாய்ப்பை இழந்து ஏற்கனவே வெளியேற்றப்பட்டு விட்டனர். இதில் ரொனால்டோ 4 கோல்கள் வரை அடித்துள்ளார்.

இங்கிலாந்து கேப்டன் ஹாரிகேன் 6 கோல் அடித்து முதல் இடத்தில் உள்ளார். இதனால் ‘தங்கஷூ’ வாய்ப்பில் அவர் முன்னிலையில் இருக்கிறார். சுவீடனுக்கு எதிரான கால்இறுதியில் ஹாரிகேன் மேலும் கோல் அடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



அதே நேரத்தில் இங்கிலாந்து கால்இறுதியில் தோற்றால் மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு ஏற்படும். லுகாகு (பெல்ஜியம்), கவானி (உருகுவே), எம்பாப்வே (பிரான்ஸ்), டெனிஸ் செர்சேவ், அர்டெம் டியாபா (ரஷியா) ஆகியோரும் அதற்கான போட்டியில் உள்ளனர். இதில் லுகாகு மட்டும் 4 கோல்கள் அடித்து உள்ளார். மற்றவர்கள் 3 கோல்கள் அடித்து உள்ளனர்.

நட்சத்திர வீரரான நெய்மர் (பிரேசில்), ஈடன் ஹசாட் (பெல்ஜியம்) ஆகியோர் தலா 2 கோல்கள் அடித்துள்ளனர்.

உலககோப்பையில் இதுவரை 56 ஆட்டங்கள் முடிந்துள்ளன. இதுவரை 146 கோல்கள் அடிக்கப்பட்டு உள்ளன. ஒரு ஆட்டத்திற்கான சராசரி கோல் 2.6 ஆகும்.

அணிகளை பொறுத்தவரை பெல்ஜியம் அதிகபட்சமாக 12 கோல்கள் அடித்துள்ளது. #FIFA2018 #WorldCup2018 #HarryKane
Tags:    

Similar News