செய்திகள்

நடுவரை பற்றி விமர்சனம்- மரடோனா மன்னிப்பு கேட்டார்

Published On 2018-07-06 09:30 GMT   |   Update On 2018-07-06 09:30 GMT
இங்கிலாந்து- கொலம்பியா அணிகள் மோதிய ஆட்டத்தில் நடுவருக்கு எதிராக கருத்தை விமர்சித்த மரடோனா சர்வதேச கால்பந்து சம்மேளனத்திடம் மன்னிபு கேட்டுள்ளார். #Maradona #FIFA2018
கால்பந்து ஜாம்பவான் மரடோனா (அர்ஜென்டினா) உலககோப்பை கால்பந்து போட்டியின் போது அர்ஜென்டினா விளையாடிய ஆட்டத்தை நேரில் பார்த்தபோது அடிக்கடி உணர்ச்சி வசப்பட்டனார்.

நைஜீரியாவுக்கு எதிரான போட்டியில் அர்ஜென்டினா வெற்றி பெற்றபோது ஆபாச சைகை காட்டினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கிடையே நாக்-அவுட் சுற்றில் இங்கிலாந்து- கொலம்பியா அணிகள் மோதிய ஆட்டத்தை மரடோனா விமர்சனம் செய்தார். இதில் இங்கிலாந்து பெனால்டி ஷூட்டில் 4-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

இப்போட்டியில் இங்கிலாந்து வெற்றியை திருடிவிட்டது என்றும் நடுவர் ஜிஜெர் நடவடிக்கை ஒரு தலைபட்சமாக இருப்பதாகவும் கூறினார். இதையடுத்து மரடோனாவுக்கு சர்வதேச கால் பந்து சம்மேளனம் (பிபா) கடும் கண்டனம் தெரிவித்தது.



இந்த நிலையில் மரடோனா தான் தெரிவித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். நான் சொன்ன கருத்து ஏற்று கொள்ள முடியாதது என்பதை ஒத்துக் கொள்கிறேன். இதற்காக சர்வதேச கால்பந்து சம்மேளனத்திடம் மன்னிப்பு கேட்கிறேன். நடுவர்களின் பணியை நான் மிகவும் மதிக்கிறேன். நடுவர்களாக செயல்படுவது என்பது சாதாரணமான வேலை அல்ல என்று கூறியுள்ளார். #Maradona #FIFA2018
Tags:    

Similar News