செய்திகள்

அமெரிக்கா கிளப்பிற்கு மாறுகிறார் இங்கிலாந்து புகழ் வெயின் ரூனே

Published On 2018-06-28 15:41 GMT   |   Update On 2018-06-28 15:41 GMT
இங்கிலாந்து அணியின் முன்னணி கால்பந்து வீரரான வெயின் ரூனே அமெரிக்காவின் மேஜர் லீக் சோசரில் விளையாடுவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளார். #WayneRooney
இங்கிலாந்து அணியின் முன்னணி வீரராக திகழ்ந்தவர் வெயின் ரூனே. இங்கிலாந்து அணிக்காகவும், பிரிமீயர் லீக்கில் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காகவும் அதிக கோல் அடித்த வீரர் என்ற சாதனையை தன்வசமாக்கியுள்ளார்.

இவர் 2002 - 2004-ம் ஆண்டு வரை எவர்டன் அணிக்காக விளையாடினார். அதன்பின் 2017 வரை சுமார் 13 வருடங்கள் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடினார். கடந்த சீசனில் தாய் கிளப்பான எவர்டனுக்கு திரும்பினார்.



இந்நிலையில் அமெரிக்காவில் நடத்தப்படும் மேஜர் லீக் சோசருக்கு செல்கிறார். இந்த தொடரில் இடம்பிடித்துள்ள டிசி யுனைடெட் அணியுடன் ரூனே ஒப்பந்தம் செய்துள்ளார்.

32 வயதாகும் ரூனே மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக 393 போட்டிகளில் விளையாடி 183 கோல்கள் அடித்துள்ளார். இங்கிலாந்து அணிக்காக 119 போட்டிகளில் விளையாடி 53 கோல் அடித்துள்ளார்.
Tags:    

Similar News