செய்திகள்

45 வயதில் களமிறங்கி உலகக்கோப்பை வரலாற்றில் சாதனைப் படைத்தார் எகிப்து கோல்கீப்பர்

Published On 2018-06-25 15:15 GMT   |   Update On 2018-06-25 15:15 GMT
உலகக்கோப்பை கால்பந்து தொடரில் மிகவும் அதிக வயதில் களம் இறங்கிய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை எகிப்து கோல்கீப்பர் படைத்துள்ளார். #WorldCup2018
உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று வரும் ஒரு போட்டியில் எகிப்து - சவுதி அரேபியா அணிகள் மோதி வருகின்றன.

ஆட்டத்தின் 22-வது நிமிடத்தில் எகிப்து அணியின் நட்சத்திர வீரர் சாலா கோல் அடித்தார். 41-வது நிமிடத்தில் சவுதி அரேபியாவிற்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. சவுதி அரேபியாவின் பஹத் பந்தை அடிக்க எகிப்து கோல் கீப்பர் எஸ்ஸம் எல் ஹடாரி சிறப்பாக தடுத்தார்.



பெனால்டி தடுத்தது பெரிய விஷயம் இல்லை. இன்றைய போட்டியில் களம் இறங்கியதன் மூலம், மிகவும் அதிக வயதில் அதாவது 45 வயதில் உலகக்கோப்பையில் விளையாடிய ஒரே வீரர் என்ற வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார்.

இவர் 1973-ம் ஆண்டும் ஜனவரி மாதம் 15-ந்தேதி பிறந்தார். தற்போது அவருக்கு 45 வயது 5 மாதம் ஆகிறது. எகிப்பு அணிக்காக கடந்த 1996-ம் ஆண்டில் இருந்து 155 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
Tags:    

Similar News