செய்திகள்

கிறிஸ்டியானோ ரொனால்டோவை இழுக்க முயற்சி செய்யும் ஐந்து அணிகள்

Published On 2018-06-25 14:21 GMT   |   Update On 2018-06-25 14:21 GMT
கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்காக டோட்டன்ஹாம், செல்சி உள்பட ஐந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. #Ronaldo #RealMadrid #PSG
போர்ச்சுக்கல் கால்பந்து அணி கேப்டனான கிறிஸ்டியானோ ரொனால்டோ உலகின் தலைசிறந்த வீரராக திகழ்ந்து வருகிறார். 33 வயதாகும் இவர் ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வருகிறது. ரியல் மாட்ரிட் அணி கடந்த மூன்று வருடமாக சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வெல்ல இவர்தான் முக்கிய காரணம்.

கிறிஸ்டியானோ ரொனால்டோ, மெஸ்சி ஆகியோருக்கு இடையே விளையாட்டில் அதிக அளவில் போட்டி நிலவி வருகிறது. இந்த சம்பளத்திலும் நீடிக்கிறது. தற்போது ரொனால்டோவை விட மெஸ்சி அதிக சம்பளம் வாங்குகிறார். அவரை விட கூடுதல் சம்பளம் வாங்க ரொனால்டோ விரும்புகிறார். ஆனால் 33 வயதாகிவிட்டால் ரியல் மாட்ரிட் அவருடனான ஒப்பந்தத்தை நீட்டிக்க யோசிக்கிறது.



இந்நிலையில் அவர் தனது பழைய கிளப்பான மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு செல்லலாம் என்ற கிசுகிசு வந்து கொண்டே இருக்கிறது. இதற்கிடையே டோட்டன்ஹாம், செல்சி அணிகளும் அவரை இழுக்க முயற்சி செய்கிறது. இதற்கிடையே பணக்கார கிளப்பான பிஎஸ்ஜி மற்றும் பேயர்ன் முனிச் அணிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

ஆனால், ரொனால்டோ மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு மட்டுமே செல்ல விரும்புவதாக கூறப்படுகிறது. தற்போது ரொனால்டோவின் வாரச் சம்பளம் 3 லட்சத்து 65 ஆயிரம் பவுண்டு எனக்கூறப்படுகிறது. ஆனால் மெஸ்சியின் சம்பளம் 5 லட்சம் பவுண்டு எனக்கூறப்படுகிறது.
Tags:    

Similar News